சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சிக்கு எதிராக பேனர் வைத்தவர் கைது

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சிக்கு எதிராக பேனர் வைத்த நபரை, போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

கோவை, சிங்காநல்லுார், ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் இளவரசன். இவரது தந்தை, சில நாட்களுக்கு முன், கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.மாநகராட்சி சார்பில், இளவரசன், அவரது மனைவி, மகள், சகோதரி உள்ளிட்ட நான்கு பேருக்கு, பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில், கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், அவரது வீட்டை தகரம் வைத்து அடைத்து, தனிமைப் படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர். இந்நிலையில், இளவரசன் தனியார் ஆய்வகத்தில் மேற்கொண்ட பரிசோதனையில், நால்வருக்கும் கொரோனா இல்லை என, உறுதியானது.

இளவரசன், தன் வீட்டின் முன், 'கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துகள். கொரோனா இல்லாத நான்கு பேருக்கு, கொரோனா இருக்கு என, முத்திரை குத்தி, என்னையும், என் குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள்' என, எழுதப்பட்ட பேனர் வைத்தார்.அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், பேனரை அகற்ற முற்பட்டனர்.

அப்போது, இளவரசன் பணி செய்ய விடாமல் தடுத்ததாக, மாநகராட்சி அதிகாரிகள், சிங்காநல்லுார் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்த போலீசார், பின் ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X