சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் நண்பரிடம் விசாரணை

Added : செப் 12, 2020
Share
Advertisement

கரூர்:அரவக்குறிச்சி தி.மு.க., -- எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியின் நண்பர் மற்றும் உதவியாளர் வீடுகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டியைச் சேர்ந்தவர், செந்தில் பாலாஜி, 45; மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார்.இவர், 2011 - 15ல், ஜெயலலிதா தலைமையிலான அரசில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, 81 பேரிடம், 1.62 கோடி ரூபாய் பெற்று, வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்தது தொடர்பான வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, கரூர் அருகே வெங்கமேட்டில் உள்ள, செந்தில் பாலாஜியின் நண்பர் சண்முகம், 45, புகளூரைச் சேர்ந்த முன்னாள் உதவியாளர் கார்த்திக், 35, ஆகியோர் வீடுகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் வீட்டில் இல்லை. சிறிது நேரத்தில், போலீசார் புறப்பட்டு சென்றனர்.

செந்தில் பாலாஜியிடம் தற்போது உதவியாளராக உள்ள சுப்ரமணி, 40, என்பவரின் வீடு உள்ள மூர்த்திபாளையத்துக்கும் குற்றப்பிரிவு போலீசார் சென்று, விசாரணை நடத்தினர்.இந்த வழக்கு தொடர்பாக, சென்னை, முகப்பேர், ஜீவன் பீமா நகரில் உள்ள, போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் வீட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று காலை, 11:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X