சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடங்க மாட்றாங்கய்யா...!

Added : செப் 12, 2020
Share
Advertisement

அருப்புக்கோட்டை:பட்டா பெயர் மாற்றம் செய்ய, 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை செம்பட்டியைச் சேர்ந்தவர், சின்னமுத்து, 38. வெள்ளக்கோட்டையில் உள்ள தன் வீட்டிற்கு பட்டா பெயர் மாறுதல் செய்ய, நகராட்சி அலுவலக சர்வேயர் சிவசங்கரன், 40, உதவியாளர் சூரியநாராயணன், 56, ஆகியோரிடம் விண்ணப்பித்தார்.அவர்கள், 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். நேற்று மாலை, 5:00 மணிக்கு சின்னமுத்து, 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தபோது, அதை வாங்கிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X