ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாயின: 24 மாணவர்கள் 100 சதம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாயின: 24 மாணவர்கள் 100 சதம்

Added : செப் 12, 2020
Share


புதுடில்லி: ஜேஇஇ மெயின் தேர்வுகள் முடிவுகள் வெளியாயின.

ஜே.இ.இ., மெயின் தேர்வுகள் செப்.1 முதல் 6ம் தேதி வரை நடந்தது. ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்.27ம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு

விட்டன. ஜேஇஇ மெயின் தேர்வை எழுத நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பதிவு செய்து இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்

என நாடு முழுவதும் அனைத்து தரப்பிலும் இருந்து கோரிக்கை எழுந்தது. ஆனாலும், தேசிய தேர்வு முகமை தேர்வை நடத்தியது.

விடைத்தாள் திருத்தும் பணி துவங்கிய நிலையில் முடிவுகள் வெளியாயின. இதில் 24 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 8 பேர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்கள் jeemain.nta.nic.in. என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண், பாஸ்வேர்டு, பிறந்த நாள்

ஆகியவற்றை வைத்து விடைத்தாளை சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளன. ஜேஇஇ மெயின் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்து இருந்த 26% பேர் தேர்வு எழுதவில்லை. முதல் மூன்று நாட்கள் நடந்த தேர்வில் 1,14,563 பேர் பங்கேற்க வில்லை. மொத்தம் பதிவு செய்து இருந்த 8.58 மாணவர்களில், 6.35 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதி இருந்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X