பொது செய்தி

தமிழ்நாடு

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி

Added : செப் 12, 2020
Share
Advertisement

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 63 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

பரமக்குடி அருகே செல்லுார் கிராமத்தில் 1924 அக்.9ல் பிறந்த இவர், 1943 ராணுவத்தில் சேர்ந்தார். சமூக சேவை செய்யும் நோக்கில் ராணுவத்தில் இருந்து வெளியேறினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சிறை சென்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சம நீதிக்காகவும் பாடுபட்டவர்.

1956ல் முதுகுளத்துாரில் நடந்த கலவரத்தை தொடர்ந்து 1957 செப்.11ல் கொலை செய்யப்பட்டார். பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் அனைத்துக்கட்சியினர் அஞ்சலி செலுத்துவர்.நேற்று அவரது நினைவிடத்தில் மகள் பிரபாராணி, குடும்பத்தினர், செல்லுார் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி, கிராம தலைவர் மலைராஜ், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.ஏ.டி.ஜி.பி., ஜெயந்த் முரளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X