பொது செய்தி

தமிழ்நாடு

பரிதவித்த மூதாட்டிக்கு கிடைத்தது பசுமாடு: 'தினமலர்' செய்தியால் அமைச்சர் நடவடிக்கை

Added : செப் 12, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:'தினமலர்' செய்தி எதிரொலியாக வேடசந்துாரில் விபத்தில் பசு மாட்டை இழந்து பரிதவித்த மூதாட்டிக்கு, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புதிய கறவை மாடு வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே கிரியம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைத்தாய் 50. ஒரு பசுவை வளர்த்து பிழைப்பு நடத்தினார். நேற்று முன்தினம் (செப்.10) வேடசந்துார் சத்திரப்பட்டி பகுதியில், திண்டுக்கல் சென்ற லாரி மோதியதில் நெடுஞ் சாலையை கடந்த பசு இறந்தது.வாழ்வாதாரமான ஒரே கறவை மாட்டை இழந்ததால் வெள்ளைத்தாய் சம்பவ இடத்திலேயே அழுது புலம்பினார்.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.செய்தியை படித்த அமைச்சர் ராதாகிருஷ்ணன், வெள்ளைத்தாயை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். கால்நடைதுறை சார்பில் பசு மாடு வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பசு மாட்டை வெள்ளைத்தாய்க்கு வழங்கினார். மண்டல இணை இயக்குனர் முருகன், உதவி இயக்குனர்கள் ஆறுமுகராஜ், அப்துல்காதர், டாக்டர்கள் ராஜேஷ், பாலசந்திரன் உடனிருந்தனர்.

வெள்ளைத்தாய் கூறுகையில், ''கறவை மாட்டை பறிகொடுத்ததால் வாழ்வே இழந்தது போல தவித்தேன். தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதும் பசு மாடு வழங்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்தனர். தினமலர் நாளிதழுக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X