போதை வழக்கில் சிக்கும் 15 நடிகர்கள்

Added : செப் 12, 2020
Share
Advertisement

மும்பை:நடிகர் சுஷாந்த் சிங்கின் தோழியும், நடிகையுமான ரியா அளித்த வாக்குமூலம் அடிப்படையில்போதை மருந்து பயன்படுத்துவது தொடர்பாக 15 பாலிவுட் நடிகர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ''கண்காணிப்பில் உள்ளவர்கள் அனைவரும் 'பி -கிரேட்' நடிகர்கள் ஆவார்கள். இதில் போதை மருந்துகளை சிலர் வாங்குபவர்களாகவும், சிலர் பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். போதை மருந்து வினியோகம் செய்வதற்கு என சில குழுக்கள் உள்ளன.

போதை மருந்து தடுப்பு பிரிவு விசாரணையின் போது இந்த வழக்கில் கைதான சவிக் சக்ரபோர்த்தி மற்றும் திபேஷ் சாவந்த் ஆகியோர் ஊரடங்கிற்கு மத்தியில் ஏப்ரல் மாதம் சுஷாந்த் வீட்டில் இருந்து கூரியர் சேவை மூலம் ரியா வீட்டிற்கு போதை மருந்தை வினியோகித்து உள்ளனர். இதனை கூரியர் பணியில் ஈடுபட்டவர்கள் உறுதி செய்துள்ளனர்.

சுஷாந்த் வீட்டில் திபேஷிடம் இருந்து அரை கிலோ போதை மருந்தை வாங்கி கொண்டு ரியா வசித்த வீட்டில் இருந்த சவிக் சக்ரபோர்த்தியிடம் வழங்கினோம்'' என கூறியுள்ளனர். திபேஷ் மற்றும் சவிக்கின் அலைபேசி எண்கள் கூரியர் சேவையில் ஈடுபட்டவர்களின் அலைபேசியில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன'' என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் வழக்கில் 15 நடிகர்களும் சிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X