பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எவ்வளவு தேவை :தமிழகத்திடம் கேட்கிறது தேர்தல் கமிஷன்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எவ்வளவு தேவை :தமிழகத்திடம் கேட்கிறது தேர்தல் கமிஷன்

சென்னை : கொரோனா அச்சுறுத்தல் நீங்காத நிலையில் தேர்தல் வந்தால் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் ஓட்டளிக்க வசதியாக கூடுதல் ஓட்டுச்சாவடிகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எவ்வளவு தேவைப்படும் என மதிப்பீடு செய்யும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திருவெற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் மூன்று சட்டசபை தொகுதிகள், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலியாக உள்ளன. இவற்றில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரு லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில் நவம்பர் மாதத்திற்குள் பீஹார் மாநில பொதுத் தேர்தலை நடத்த வேண்டி உள்ளது. அதனுடன் சேர்த்து அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகள் மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.


latest tamil news




அதேபோல தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வாய்ப்புள்ளது. தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை. நோய் பரவல் தொடர்ந்தபடி உள்ளது.எனவே தேர்தலின் போது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டளிக்க வசதியாக பல முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது.

தற்போது ஓட்டுச்சாவடிகளில் தலா 1500 வாக்காளர்கள் உள்ளனர்.இதை பிரித்து ஓட்டுச் சாவடிக்கு 1000 வாக்காளர்கள் என்றால் கூடுதலாக எத்தனை ஓட்டுச் சாவடிகள் அமைக்க வேண்டும்; அவற்றை தற்போதுள்ள ஓட்டுச் சாவடிகளில் அமைக்க இட வசதி உள்ளதா; இட வசதி இல்லையென்றால் அருகில் எங்கு அமைப்பது என்ற விபரங்களை திரட்ட வேண்டும்.கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டால் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கூடுதலாக எவ்வளவு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவை; கூடுதலாக எவ்வளவு பணியாளர்கள் தேவைப்படுவர் என அனைத்து விபரங்களையும் தயார் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை பதிவுகளை நீக்க வேண்டும். புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
12-செப்-202017:07:09 IST Report Abuse
Apposthalan samlin காங்கிரஸ் தனக்கு தானே வைத்து கொண்ட பெரிய ஆப்பு இந்த வோட்டிங் மிஷின் கொண்டு வந்தது பெரிய வளறிந்த நாடுகளில் எல்லாம் பேப்பர் தான் .
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-செப்-202013:43:40 IST Report Abuse
S.Baliah Seer ஆக தேர்தல் கமிஷனுக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு ஒரு சந்தேகம் நிறைய கேட்கச்சொல்லி அவற்றில் சிலவற்றைத் தேர்தல் முடிந்ததும் ஒட்டு எண்ணிக்கைக்கு முன் தில்லு முல்லுக்கு பயன் படுத்திக்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துகிறதோ என்னவோ?
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
12-செப்-202013:07:57 IST Report Abuse
Naresh Giridhar கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேணும் . ஆளுங்கட்சியில் சிலர் வாக்களிப்பு முடித்தபின் தங்கள் தொகுதியில் சில மாற்றங்கள் செய்ய தேவைப்படும். தேனியில் நடந்தது தெரியும் தானே. உ பி யிலும் நடந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X