ஐதராபாத் : தெலுஙகானாவில் கொரோனா நோயாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில சுகாதாரதுறை முயன்று வருவதாக அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் கூறினார்.

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தெலுங்கானாவின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறைந்தது 10,000 கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும், தனியார் மருத்துவமனைகளில், 5000 கொரோனா நோயாளிகளுக்கும் ஆதரவாக உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மாநில சுகாதாரதுறை முயன்று வருகிறது. நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்ட அனைத்து சுகாதார சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அடையாளம் காணப்பட்ட 22 அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்ஸிஜன் தொட்டிகள் அமைப்பது தொடர்பான பணிகளை விரைவு படுத்துமாறு சுகாதார அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் மூத்த சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர ராஜேந்தர் கூறுகையில், ஒரு லட்சம் கொரோனா உறுதியான நோயாளிகள் இருப்பதாக நாங்கள் கருதினால், குறைந்தது 15,000 தொற்று உறுதியான நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் போன்ற மருத்துவ வாயுக்கள் போதுமான அளவு வழங்கப்படுவது உட்பட சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஏற்கனவே காந்தி மருத்துவமனை, நிம்ஸ், ககாட்டியா மருத்துவக் கல்லூரி, வாரங்கல், ரிம்ஸ் ஆதிலாபாத் மற்றும் நிஜாமாபாத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் திரவ ஆக்ஸிஜன் தொட்டிகள் உள்ளன.

சமீபத்தில், மகாபூப்நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை, கிங் கோட்டி, டிம்ஸ், கச்சிபவுலி மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் திரவ ஆக்ஸிஜன் தொட்டிகள் அமைக்கப்பட்டன. சித்திப்பேட்டை மற்றும் கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஒரு வார காலத்திற்குள் அவற்றின் சொந்த திரவ ஆக்ஸிஜன் தொட்டிகளைக் கொண்டிருக்கும்.மீதமுள்ள 12 இடங்களில் திரவ ஆக்ஸிஜன் தொட்டிகளை அமைக்க குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று மூத்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டில் அந்த வசதி இல்லாத மாவட்டங்களில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு போதுமான தனிமை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE