சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு கொறடா மீது பெண் புகார்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பெரம்பலுார்:அரசு தலைமை கொறடா மீது உறவுக்கார பெண் புகார் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலுார் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி சுமதி 45. இவர் அரியலுார் தொகுதி அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான ராஜேந்திரனின் உறவினர் எனக் கூறப்படுகிறது.இவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள வீடியோ:என் கணவர் செந்தில் சாவுக்கு காரணம் அரசு கொறடா ராஜேந்திரன் தான். சாலை விபத்தில் என் கணவர் இறந்த பின் சந்திரசேகர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன்.

இதையறிந்த அரசு கொறடா ராஜேந்திரன் சந்திரசேகருக்கு உயர் பதவிகள் வாங்கித் தருவதாகவும், எம்.பி. சீட் வாங்கித் தருவதாகவும் கூறி என் உறவை நிறுத்தச் சொல்லி அவரை மிரட்டுகிறார். என்னையும் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.அவருக்கு ஆதரவாக என் சகோதரர்கள் உட்பட சிலர் என்னை மிரட்டி வருகின்றனர். எங்களுக்கு எது நடந்தாலும் கொறடாதான் பொறுப்பு. இவ்வாறு பேசி உள்ளார்.

ராஜேந்திரன் தரப்பில் கேட்டபோது 'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் சுமதியை துாண்டி வீடியோ பதிவிட கூறியுள்ளனர். அவருக்கு கடன் நிறைய உள்ளது. பணத்துக்காக இவ்வாறு பேசுகிறார். அவர் தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் பொய்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X