பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை - மதுரை அதிவேக ரயில் சோதனை

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

விருத்தாசலம்:சென்னை - மதுரை இடையே இருவழி பாதையில் அதிவேகத்தில் ரயில்களை இயக்க, ஓ.எம்.எஸ்., சிறப்பு வாகனம் மூலம் டிராக் பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் பயண நேரத்தை குறைக்க, வழக்கமான 100 - 110 கி.மீ., வேகத்தை, 120 கி.மீ., ஆக உயர்த்த அறிவுறுத்தியது.முதற்கட்டமாக, சென்னை - மதுரை இடையே ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தண்டவாளம் சோதனை சமீபத்தில் நடந்தது.

தற்போது சென்னை - மதுரை ரயில் பாதையில் ஓ.எம்.எஸ்., வாகனம் மூலம் (ஆசிலேஷன் மானிடரிங் சிஸ்டம்) சோதனை நடத்தப்பட்டது.சென்னையில் நேற்று காலை 7:30 மணியளவில் ஓஎம்எஸ்., வாகனம் 135 முதல் 140 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. வேகம் அதிகரிப்பதால் சென்னை-மதுரை இடையே பயணம் ஒரு மணி நேரம் குறையும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
12-செப்-202018:14:02 IST Report Abuse
Vijay D Ratnam ஐந்து மணி நேர பயணத்தில் சென்னை, தாம்பரம் டு மதுரைக்கு நான் ஸ்டாப் ரயில் விடுங்கப்பா. சென்னையிலிருந்து மதுரை ஜங்க்ஷன் தாண்டி செல்லும் ரயில்கள் அனைத்தும் கூடுமானவரை மதுரை வரை நான் ஸ்டாப்பாக செல்வது போல ஏற்பாடு செய்யுங்கள். உதாரணத்துக்கு கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எக்மோர், தாம்பரம் அடுத்து மதுரை ஜங்ஷன், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்யாகுமரி செல்வது போல இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X