சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றில் தேங்கிய ரசாயன நுரை

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஓசூர்:கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று 960 கன அடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட நீரில் ரசாயன நுரை தேங்கியது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் காலை 480 கன அடி நீர்வரத்து இருந்தது. தென்பெண்ணை ஆற்றில் 480 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 960 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 40.34 அடிக்கு நீர்இருப்பு இருந்ததால் 960 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

அணையின் ஆறு மதகுகள் வழியாக அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் ஆற்றில் ரசாயன நுரை ஏற்பட்டது. ஆங்காங்கு நுரை தேங்கியதுடன் பெரும்பாலான நுரை தண்ணீருடன் கலந்து கே.ஆர்.பி. அணை நோக்கி சென்றது. ரசாயனம் கலந்த நீரால் தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றம் வீசியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X