அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நவீன தீண்டாமையை துாண்டுகிறார் ஸ்டாலின்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி,:''மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதால் அரசு பள்ளிகளில் கற்கும் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வாய்ப்பை தடுக்கும் நவீன தீண்டாமையை ஸ்டாலின் துாண்டுகிறார்'' என பா.ஜ. மாநில தலைவர் முருகன் குற்றம் சாட்டினார்.

கோவை தெற்கு மாவட்ட பா.ஜ. செயற்குழு கூட்டம் கிணத்துக்கடவில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடியின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் தமிழகத்தில் நடந்துள்ள மிகப்பெரிய முறைகேடு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மொத்தம் 13 மாவட்டங்களில் 5 லட்சம் விவசாயிகள் கணக்கில் 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ. தீவிரமாக தயாராகிறது.

பா.ஜ. இடம்பெறும் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. தற்போதுள்ள கூட்டணியே தொடரும்.ஏற்கனவே தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது. அந்த வாய்ப்பை அரசு பள்ளிகளுக்கும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டால் தி.மு.க. அதை எதிர்க்கிறது.

அரசு பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வாய்ப்பை தடுக்கும் நவீன தீண்டாமையை ஸ்டாலின் துாண்டுகிறார். தி.மு.க.வில் உட்கட்சி ரீதியில் சத்தியவாணி முத்து முதல் ஆ.ராஜா வரை பட்டியல் இனத்தவர்கள் முக்கிய பதவிகளுக்கு வர முடியாமல் புறக்கணிக்கப்படும் வரலாறு உள்ளதை நினைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X