சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேட்டில் தஞ்சாவூர் - விக்கிரவாண்டி நான்கு வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த வீடுகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.தஞ்சாவூர் - விக்கிரவாண்டி நான்கு வழிச் சாலைக்காக கரைமேட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலம், வீட்டுமனைகள் கையகப்படுத்தப்பட்டன. அந்த இடங்களில் இருந்த வீடுகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதற்காக காலை 10.00 மணியளவில் சேத்தியாத்தோப்பு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.நில எடுப்பு தனி தாசில்தார் முரளி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் மேரி, சப்இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜா, விஸ்வநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் வீடுகள், பள்ளி கட்டடங்கள், கோவில் கட்டடங்களை இடித்து அகற்றினர்.வருவாய் ஆய்வாளர் சின்னராஜ், வி.ஏ.ஓ., சுந்தரகணேசன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE