பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலை சுற்றி மூங்கில்வேலி அகற்ற வி.எச்.பி., கோரிக்கை

Added : செப் 12, 2020
Share
Advertisement

பண்ருட்டி; பண்ருட்டி அருகே கோவில் சுற்றி அமைத்த மூங்கில் வேலியை அகற்ற வேண்டும் என விஷ்வ இந்துபரிஷத் மாவட்ட தலைவர் பழனிமுருகன் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அவரது மனு விவரம்:பண்ருட்டி வட்டம், வையாபுரிபட்டினம் ஸ்ரீபாலதண்டாயுதபாணி முருகன் கோவிலை 78 ஆண்டுகளாக சொந்த இடத்தில் கட்டி 78 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார்.கோவிலுக்கு தீமிதிக்கும் இடம் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளது. கோவில் தீமிதி திடலில் உள்ள முருகன் கோவிலை சில சமூக விரோத கும்பல் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வரும் நோக்கில் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.தாக்குதல் குறித்து போலீசார் வழக்கு பதிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவில் சுற்றிலும் மூங்கில் வேலி அமைத்து அடைத்துள்ளனர். இந்து விரோத, மத உணர்வை சீர்குலைக்கும் வகையில் சேமக்கோட்டை ஊராட்சித் தலைவர் செயல்படுகிறார்.கோவிலை சுற்றி அமைத்துள்ள முள்வேலியை அகற்றிட வேண்டும். மின் இணைப்பு வழங்க வேண்டும். விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X