பொது செய்தி

தமிழ்நாடு

சுவாச குறைபாடுக்கு மருந்து அறிமுக விழா

Added : செப் 12, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுாரில் தி சுசான்லி குரூப்ஸ் சார்பில் புதிய ஆயுர்வேத மருந்து அறிமுக விழா நடந்தது.கடலுார் தி சுசான்லி குரூப்ஸ், தனது வீ ெஹர்பல் கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமான சித்தா, ஆயுர்வேதா மருந்துகளை தயாரிக்கும் ஆராய்ச்சிக்குழு துணையுடன் சுவாச குறைபாடுக்கு புதிய ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் அறிமுக விழா கடலுாரில் நடந்தது.தி சுசான்லி குரூப்ஸ் சேர்மன் டாக்டர் ரவி, மருந்தை அறிமுகம் செய்து பேசுகையில், 'தி சுசான்லி குழுமத்தின் 29ம் ஆண்டு துவக்க விழாவில் 'சுவாசபிரீ என பெயரிட்டு அறிமுகப்படுத்தியுள்ள இம்மருந்தை ஆஸ்துமா, நாள்பட்ட சளி, தும்மல் பிரச்னைக்கு தீர்வு காண பயன்படுத்தலாம்' என்றார்.தி சுசான்லி குழும இணை சேர்மன் உஷா ரவி, வெற்றி விநாயகா மெடிக்கல்ஸ் கவுதமன், டாக்டர் பானுபிரியா, மருந்து உற்பத்தி பிரிவு மூத்த மேலாளர் சுந்தர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X