தமிழ்நாடு

தீவிரம்: பரவனாற்றை ஆழப்படுத்தும் பணி...குஜராத், கொச்சின் 'டிரஜ்ஜர்'கள் வருகை

Added : செப் 12, 2020
Share
Advertisement
 தீவிரம்:  பரவனாற்றை ஆழப்படுத்தும் பணி...குஜராத், கொச்சின் 'டிரஜ்ஜர்'கள் வருகை

கடலுார்; கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்த முகத்துவாரத்தில்இருந்து பரவனாறு வரை 1,700 மீட்டர் நீளத்திற்கு ஆழப்படுத்தும் பணிதீவிரமாக நடந்து வருகிறது.

கடலுாரில் பரவனாறு, உப்பனாறு ஆகிய ஆறுகள் கடலில் கலக்கும் இடத்தில்142 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவின் பழமையான முதுநகர் துறைமுகம் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே இயற்கையாகவே 15 மீட்டர் ஆழம்இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு துறைமுகம் ஏற்றதாக இருந்தது.கடலுார் துறைமுகத்தின் முகத்துவாரப் பகுதி ஆழம் துார்ந்தது, தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட் லிமிடெட் கம்பெனியில் 'ப்ரொப்லின்' வாயு இறக்குமதி செய்தபோது அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு உட்பட பலகாரணங்களால் 2002ம் ஆண்டிற்கு பிறகு கப்பல் வருகை முற்றிலும்நிறுத்தப்பட்டது.மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்கும் வகையில், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் சாகர்மாலா திட்டத்தில், கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்த ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன் மூலம் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் இருந்து பரவனாறு வரை ஆழப்படுத்தும் பணி நடக்க உள்ளதாகவும், பரவனாற்றின் அருகேசரக்குகளை ஏற்றவும், இறக்கவும் இரண்டு தளங்கள் அமைத்து, 5.68 மெட்ரிக் டன் சரக்கு கையாளும் வகையில், இந்திய தொழில்நுட்ப மையம் -மெட்ராஸ் (ஐஐடி) திட்ட வடிவம் ஏற்படுத்தியது.தொடர்ந்து துறைமுகம் மேம்படுத்தும் பணி கடந்த 2018 அக்டோபரில் துவங்கியது.

இதற்காக முகத்துவாரத்தின் தெற்கு பகுதியில், 85 மீட்டர், வடக்கு பகுதியில் 210 மீட்டர் துாரத்திற்கு டெட்ராபேடு எனப்படும் சிமென்ட்கான்கிரீட் கற்கள் கொட்டி அலை தடுப்பு அமைக்கப்பட்டது.கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றவும், இறக்குமதி செய்யும் வகையிலும் தலா120 மீட்டர் நீளம், 21 மீட்டர் அகலம், 4.5 மீட்டர் உயரத்தில் இரண்டு கப்பல் அணையும் தளங்கள் (வார்ப்) அமைக்கும் பணிகள் நடந்தன.

இப்பணிகள்முடியும் தருவாயில் உள்ளன.இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்குஅமலுக்கு வந்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. பின், பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டதை அடுத்து, இரண்டரை மாதங்களுக்கு பிறகு மீண்டும்பணிகள் துவங்கின.தற்போது, துறைமுகத்தின் முகத்துவாரப் பகுதியில் இருந்து பரவனாறு வரை1,700 மீட்டர் நீளம், 60 மீ., அகலம், 9 - 10 மீட்டர் ஆழம் வரை துார் வாரும்பணிகள் நடக்கின்றன. இதற்காக குஜராத் மற்றும் கொச்சினில்இருந்து இரண்டு துார் வாரி கப்பல்கள் 'டிரஜ்ஜர்' வரவழைக்கப்பட்டு, பணிகள்தீவிரமாக நடக்கின்றன.

இதற்கிடையே கடலுாரில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நடந்த கொரோனாதடுப்பு பணிகள் குறித்தஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழாவில், பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, கடலுார் துறைமுகம் 135கோடி செலவில் ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.வணிக கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்கும்' என தெரிவித்தார்.இதனையடுத்து துறைமுகம் மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X