பொது செய்தி

தமிழ்நாடு

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா

Added : செப் 12, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தன.நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் உள்ள ஆனந்த கால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம், சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார்.கொரோனா ஊரடங்கு தளர்வில் அனுமதியளித்ததால் 5 மாதத்துக்கு பிறகு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் காலபைரவரை தரிசனம் செய்தனர்.மேலும் கைலாசநாதர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X