பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை

Added : செப் 12, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் 11 பகுதிகள் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் காய்ச்சல் இருமல் சளி அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. கிருமி நாசினி தெளிக்கும் பணி நடக்கிறது.டாக்டர் யுவராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் 500க்கும் மேற்பட்டவர் களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், மருத்துவமனை மருந்தாளுனர் பொற்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X