பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய பாசறை நிர்வாகிகள் நியமனம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் மங்களூர் ஒன்றிய அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண் பாசறை உறுப்பினர்கள் நியமன கூட்டம் நடந்தது.மங்களூர் மேற்கு ஒன்றிய செயலர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராமு, மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலர் தங்கவேல் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் சந்திரபாபு, அய்யாசாமி, செந்தில், ராஜேந்திரன், ஜகஜானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் பங்கேற்று புதிய உறுப்பினர்களை வாழ்த்தி பேசினார். நிர்வாகி குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X