தீவிபத்தில் பாதித்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீவிபத்தில் பாதித்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்

Added : செப் 12, 2020
Share

விருத்தாசலம்; தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை வழங்கினார்.விருத்தாசலம் அடுத்த எம்.அகரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் மல்லிகா, இவரது கூரைவீடு நேற்று காலை தீப்படித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு, கலைச்செல்வன் எம்.எல்.ஏ, நிவாரண உதவிகளை வழங்கினார்.மங்கலம்பேட்டை முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம், முன்னாள் கவுன்சிலர் செல்வராசு, அ.தி.மு.க., கிளை செயலர்கள் சஞ்சீவி, வேல்முருகன், சிங்காரவேல், ரமேஷ், இளைஞரணி குபேரதேவதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X