பொது செய்தி

தமிழ்நாடு

கருப்பு பேட்ஜ் அணிந்து தபால் ஊழியர்கள் பணி

Added : செப் 12, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுாரில் அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் தபால்காரர்களின் வேலைப்பளு கணக்கிடுவதை நிறுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளாக நடத்தாமல் உள்ள நேரடி தபால்காரர்கள் தேர்வை நடத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்கத்தினர் கடலுார் தலைமை தபால் நிலையத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டத் தலைவர் காந்தி தலைமை தாங்கினார். செயலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் ஜனார்த்தனம் வரவேற்றார். பொருளாளர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X