இந்திய மாணவர்  சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்திய மாணவர்  சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 12, 2020
Share
 இந்திய மாணவர்  சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுார் அண்ணாபாலம் சிக்னல் அருகில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் இணைய வசதியை உறுதிப்படுத்திய பிறகே இணைய வழி கல்வி நடத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவி செம்மலர் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ராம்குமார், சுதின் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.சிதம்பரம் தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் திலீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மா.கம்யூ.,ஒன்றிய செயலர் தண்டபாணி, வாலிபர் சங்க ஒன்றிய செயலர் சுரேஷ், சேகர், மணிகண்டன், பார்த்திபன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர், ஜெயராமன், வாசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X