பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர் கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் மாறும்: அமைச்சர் சம்பத் நம்பிக்கை

Added : செப் 12, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக விரைவில் மாறும் என, அமைச்சர் சம்பத் நம்பிக்கை தெரிவித்தார்.

கடலுார் அருகே தனியார் பொறியியல் கல்லுாரியில் அலோபதியுடன் சித்த மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு முழுமையான சித்த மருத்துவ சிகிச்சையளிக்க, கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி வளாகத்தில் 150 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையத்தை நேற்று அமைச்சர் சம்பத் திறந்து வைத்து பேசியதாவது:கடலுார் மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 391 நபர்களுக்கு கோவிட் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரத்து 461 நபர்களுக்கு கொரோனா உறுதியானது. தினமும் 4000க்கும் மேல் பரிசோதனை செய்வதால், தொற்று உள்ளவர்கள் அதிகமாக கண்டறியப்பட்டு பரவாமல் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் விரைவில் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும்.அரசு கல்லுாரியில் 150 படுக்கை வசதியுடன் முழுக்க சித்தா மருத்துவ முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. பாத்ரூம் வசதி, சோப்பு, சீப்பு, துண்டு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும்.சித்த மருத்துவ முறையில் நடைபயிற்சி, மூச்சுப்பயிற்சி, கபசுர குடிநீர், மூலிகை சிற்றுண்டி, வேது பிடித்தல், நோய் காப்பு சித்த உணவுகள், மிளகு சாதம், உளுந்து சாதம், வாழைப்பூ பொறியல், மோர் சாதமுடன் ஐங்காயப்பொடி, சீரகத்தண்ணீர், நெல்லிக்காய் சாதம், காய்கறி கூட்டாஞ்சோறு, எலுமிச்சை இஞ்சி ரசம், மொச்சை, பீன்ஸ் பொறியல் மணத்தக்காளி கூட்டு, துாதுவளை உணவுகளும் வழங்கப்படும்.குறுகிய நாட்களில் நோய் தொற்று சரி செய்யப்பட்டு நல்ல முறையில், நான்கு நாட்களில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர். பொது மக்களும் விழிப்புடன் இருந்து சமூக இடைவெளி கடைபிடித்து நோய் தொற்று பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X