பொது செய்தி

தமிழ்நாடு

மீன் உலர் படுத்தும் தளம் பூமி பூஜை

Added : செப் 12, 2020
Share
Advertisement

சிதம்பரம்; சிதம்பரம் அடுத்த முடசல் ஓடையில் மீன் உலர்படுத்தும் தளம் கட்டு மானப்பணி பூமி பூஜை நடந்தது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அம்பேத்கர் இருக்கை மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டம் மூலமாக ரூ.5 லட்சம் செலவில் மீன் உலர்படுத்தும் தளம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை முடசல்ஓடை கிராமத்தில் நடந்தது.மாவட்ட மீன் வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் ரம்யாலட்சுமி முன்னிலை வகித்தார். முடசல் ஓடை மீனவர் சங்க தலைவர் பழனி, அண்ணாமலைப் பல்கலை., இந்திய மொழிப்புல முதல்வர் முத்துராமன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சவுந்தரராஜன், ராதிகாராணி செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X