பொது செய்தி

தமிழ்நாடு

பழைய இடத்திற்கு மீன் மார்க்கெட் மாற்றம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சிதம்பரம்; கொரோனா பரவல் காரணமாக அண்ணா கலையரங்கத்திற்கு மாற்றப்பட்ட மீன் மார்க்கெட் நேற்று முதல் மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டது.கொரோனா பரவல் அதிகரித்ததால், சிதம்பரத்தில் குறுகிய இடத்தில் செயல்பட்ட மீன் மார்க்கெட் அருகிலுள்ள அண்ணா கலையரங்கத்தில் மாற்றப்பட்டது.மழை பெய்ததால் அப்பகுதி சேறும் சகதியாகவும் மாறி மிக மோசமாக காணப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது.இதையடுத்து நேற்று நகராட்சி நிர்வாகம் மீன் மார்க்கெட்டை மீண்டும் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள பழைய இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டது.நேற்று முதல் மீண்டும் மீன் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு பழைய இடத்தில் செயல்படுகிறது. இங்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X