பொது செய்தி

தமிழ்நாடு

இலவச முகக்கவசம் வழங்கும் பணி கடலூரில் அமைச்சர் துவக்கினார் :

Added : செப் 12, 2020
Share
Advertisement



கடலுார்; கடலுாரில், பொதுமக்களுக்கு விலையில்லா முகக் கவசங்கள் வழங்கும் பணியை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார்.கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்களுக்கு, நியாய விலைக்கடைகள் மூலம் இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. கடலுார் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் முகக்கவசங்கள் வழங்கும் திட்ட துவக்க நிகழ்ச்சி, மாவட்ட சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் நடந்தது.கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கினார். அமைச்சர் சம்பத் பங்கேற்று, பொது மக்களுக்கு விலையில்லா முகக்கவசங்களை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார்.அப்போது அமைச்சர் பேசுகையில், பொது மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகள் மூலம் இலவச முகக்கவசங்கள் விநியோகிக்க அரசு அறிவித்தது.கடலுார் மாவட்டத்தில் 1420 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 29 ஆயிரத்து 949 கார்டு தாரர்களின் குடும்பங்களில் 24 லட்சத்து 14 ஆயிரத்து 114 நபர்களுக்கு தலா 2 வீதம் 48 லட்சத்து 28 ஆயிரத்து 228 மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவல் தடுக்க அனைத்து தரப்பு மக்களும் சமூக பொறுப்புணர்வுடன் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மேலாண் இயக்குநர் இளஞ்செல்வி, துணைப்பதிவாளர்கள் சண்முகம், ஜெகத்ரட்சகன், துரைசாமி, ஜீவாநந்தம், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சக்திவேல் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X