தமிழ்நாடு

கடலுாரில் 12,127 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 12, 2020
Share
Advertisement
 கடலுாரில் 12,127 பேர் 'டிஸ்சார்ஜ்'

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், நேற்று 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 750 ஆக உயர்ந்தது.

கடலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 15 ஆயிரத்து 461 பேர். நேற்று 289 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது.ஆந்திராவிலிருந்து திரும்பிய நபர் 2, கர்ப்பிணி பெண்கள் 4, டாக்டர்கள் 2, தனிமைப்படுத்தப் பட்டவர்கள், பாதித்தவர்க ளுடன் தொடர்பில் இருந்த வர்கள் உட்பட 289 பேருக்கு தொற்று உறுதியானது.நேற்று 307 பேர் குணமடைந்ததால், இதுவரை 12 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 3,204 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.இது வரை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 685 பேருக்கு பரிசோதனை செய்ததில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 134 பேருக்கு தொற்று இல்லை. 4,801 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மாவட்டத்தில் 133 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.3பேர் பலிமாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 156 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று மூவர் இறந்தனர். சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது கடலுார் நபர், 53 வயது நெய்வேலி நபர், கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 41 வயது புவனகிரி நபர் ஆகியோர் இறந்தனர். இதனையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X