பொது செய்தி

தமிழ்நாடு

சோமண்டார்குடி அரசு பள்ளிக்குசுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

Added : செப் 12, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மோ.வன்னஞ்சூர், அலம்பளம், மோகூர் உட்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின், ஆற்றங்கரையோரம் கட்டப்பட்ட புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.இந்த பள்ளி, சுற்றுச் சுவர் இன்றி திறந்தவெளியாக உள்ளது. இதனால், கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன.மேலும், பள்ளி முன் உள்ள விளையாட்டு மைதானத்தில், இரவு நேரங்களில் மது அருந்தும் நபர்கள், காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு விட்டுச் செல்கின்றனர். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளி திறப்பதற்கு முன் சுற்றுச்சுவர் அமைத்திட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X