நவீன அரிசி ஆலை உமி, சாம்பல் பரவலால் பாதிப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement
 நவீன அரிசி ஆலை உமி, சாம்பல் பரவலால் பாதிப்பு

கள்ளக்குறிச்சி; அரசின் நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் உமி, சாம்பல்கள் பரவலால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கொரோனா பரிசோதனை முகாமில் பணிபுரிபவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் கூட்டுறவு துறையின் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.இ.ஓ., அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.ஆலையின் புகைப்போக்கி வழியாக ஏராளமான உமி மற்றும் சாம்பல்கள் தினமும் பரவி வருவதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் சில மாதங்களாக கொரோனா பரிசோதனை மையமும், டி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் தற்போது சி.இ.ஓ., அலுவலகமாகவும் இயங்கி வருவதால், அங்கு பணிபுரிபவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே உமி, சாம்பல் பரவாமல் தடுக்க அரிசி ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X