பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி சாலைவிரிவாக்கப் பணி மீண்டும் துவங்கியது

Added : செப் 12, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரிக்குச் செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான மணல், செங்கல், சிமென்ட், கம்பிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் கனரக வாகனங்கள் மூலம் இச்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.குறுகிய சாலையாக இருந்த ரோடுமாமந்துார் சந்திப்பிலிருந்து அரசு மருத்துவக் கல்லுாரி வரையிலான 3 கி.மீ., தொலைவிற்கு சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி கடந்த ஜூன் மாதம் துவங்கியது.சில நாட்கள் நடந்த இப்பணி திடீரென கிடப்பில் போடப்பட்டது. இதற்காக கொட்டப்பட்ட ஜல்லிகள் சாலையில் சிதறிக் கிடந்தன. இதனால் இவ்வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் ஜெ.சி.பி., இயந்திரம் மூலம் பழைய தார் ரோடுகளை அகற்றி, சாலை விரிவாக்கப் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இந்த சாலைப்பணியை விரைந்து முடித்திட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X