சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வணிக வளாக மாடியின் கைப்பிடி சுவர் இடிப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

சின்னசேலம்; சின்னசேலம் நகர பகுதியில் உள்ள வணிக வளாக கட்டடத்தின் மேல் மாடியில் உள்ள விரிசல் விழுந்த கைப்பிடி சுவரை பாதுகாப்பு கருதி பேரூராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

சின்னசேலம் பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டடம், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பூக்கடை, பழக்கடை, மெடிக்கல், மொபைல் போன் கடைகள், ஓட்டல்கள் என 18க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கட்டடத்தின் மேல் மாடியில் உள்ள கைப்பிடி சுவர் பல ஆண்டுகளாக விரிசல் அடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், வணிக வளாகத்திற்கு வரும் மக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சத்துடன் இருந்தனர்.இந்நிலையில், இடிந்து விழும் தருவாயில் இருந்த கைப்பிடி சுவர்களை பேரூராட்சி ஊழியர்கள் நேற்று இடித்து அகற்றினர். பருவ மழை துவங்க உள்ள நிலையில் கட்டடத்தின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X