சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்

Added : செப் 12, 2020
Share
Advertisement

வாகனம் மோதி ஒருவர் பலிசின்னசேலம்: திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி, 56; தென்கீரனுாரில் ரேஷன்கடையில் விற்பனையாளர். இவர், நேற்று முன்தினம் இரவு தனியார் பால் சொசைட்டிக்கு பால் ஊற்றுவதற்காக பைக்கில், சின்னசேலம் - நயினார்பாளையம் சாலையில், தோட்டப்பாடி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜானி மீது மோதியது. படுகாயமடைந்த ஜானி, சின்னசேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சின்னசேலம் போலீசார் விசாரிக்கின்றனர்.பெற்றோரை தாக்கிய மகன் கைதுசின்னசேலம்: பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள், 51; இவரது மகன் பெரியசாமி, 24; இவரது பழுதான பைக்கை 2 ஆண்டுகளாக வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். இந்த பைக் சீட் மற்றும் டேங்க் ஆகியவற்றை விற்பதற்காக அய்யம்பெருமாள் கழற்றினார். அப்போது அங்கு வந்த பெரியசாமி, அய்யம்பெருமாளை ஆபாசமாக திட்டி, தாக்கினார். தடுத்த தாய் ராசாத்தியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து பெரியசாமியை, 24; கைது செய்தனர்.மாடு முட்டி பெண் பலிரிஷிவந்தியம்: ஓடியந்தல் காலனியைச் சேர்ந்தவர் கஜபதி மனைவி கோவிந்தம்மாள், 34; இவர், கடந்த 4ம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் வைக்கச் சென்ற போது, மாடு முட்டி படுகாயமடைந்தார்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.வாலிபர் தற்கொலைதிருக்கோவிலுார்: கட்சிக்குச்சான் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வினோத்குமார், 30; சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் மாலை விஷ விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X