ஆட்களை ஏற்றிச் செல்லும் வேன்கள்: தொற்று பரவும் அபாயம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கொரோனா பரவல் அச்சமின்றி டாடா ஏஸ் வேன்களில் கும்பலாக ஆட்கள் ஏறிச் செல்வதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது, ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது.ஆனால் கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா பரவலின் வேகம் அதிகரிப்பதுடன், தொற்றினால் உயிரிழப்பும் உயர்ந்து கொண்டிருக்கிறது.முகக் கவசம், தனிமனித இடைவெளி என போலீஸ், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தும் பொதுமக்கள் அதனை மக்கள் கண்டு கொள்ளவில்லை.

பல்வேறு பகுதிகளில் திருமணம், கோவில் விழாக்கள், துக்க நிகழ்ச்சிகள் மற்றும் கூலி வேலைக்குச் செல்பவர்கள் என டாடா ஏஸ் வேன்களில் கும்பலாக ஆட்களை ஏற்றிச் செல்வது தொடர்கிறது. அவ்வாறு செல்பவர்கள் முகக் கவசம் மற்றும் தனி மனித இடைவெளியின்றி பயணிக்கின்றனர்.இதனால், தொற்று இன்னும் வேகமாக பரவ வழி வகுக்கும். இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X