தமிழ்நாடு

எப்போது: கிளை நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக அறிவிப்பது...சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Added : செப் 12, 2020
Share
Advertisement
 எப்போது:  கிளை நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக அறிவிப்பது...சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி; மாவட்டம் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள நுாலகம் சொந்த கட்டடத்தில் இயங்கவும், மாவட்ட மைய நுாலகமாக அறிவித்து அனைத்து வசதிகளுடன் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கடந்த 1957ம் ஆண்டு நுாலகம் திறக்கப்பட்டு வ.உ.சி., நகரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே உள்ள தெருவில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. புத்தகங்கள் மற்றும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகி வந்த நிலையில், அதற்கான வசதி இல்லாததால் சில ஆண்டுகளுக்கு முன் விளாந்தாங்கல் சாலை அடுத்த வைஷ்ணவி நகர் விரிவாக்க பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.இந்த நுாலகத்தில் 5,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர். காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயங்கும் இந்நுாலகத்தில் இரண்டாம் நிலை நுாலகர் ஒருவர், மூன்றாம் நிலை நுாலகர்கள் மூன்று பேர், துப்புரவு பணியாளர் ஒருவர் என 5 பேர் ஷிப்ட் முறையில் பணிபுரிகின்றனர்.

கள்ளக்குறிச்சியைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமப் பகுதி, கிளை நுாலகங்களுக்கு மாதாந்திர செலவின தொகை வழங்கும் மையமாக விளங்கும் இந்நுாலகத்தில் அரசு தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., முதல் அனைத்து குரூப் தேர்வுகளுக்குமான புத்தகங்கள் என 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 42 ஆயிரத்து 771க்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஜெராக்ஸ் மிஷின், இண்டர்நெட் மற்றும் பிரிண்டருடன் கூடிய கம்ப்யூட்டர் வசதியும் உள்ளன.பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கடந்த 2014ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நுாலகத்திதற்காக 15 சென்ட் அரசு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.சொந்தமாக இடம் கிடைத்தும், இன்றளவும் அங்கு கட்டடம் கட்டும் பணிக்காக எந்தவொரு நடவடிக்கையும் துவங்கப்படவில்லை. அதற்கான அரசாணை வழங்கப்படாததாலும், நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாததாலும் பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயமாகி ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களும் வளர்ச்சி பெற்று வரத்துவங்கியுள்ளன.

ஆனால் கல்வி அறிவுடன் பொது அறிவை வளர்த்துக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும் நுாலகத்துறைக்கு எந்த ஒரு அபிவிருத்தி திட்டமும் அரசு சார்பில் அறிவிக்கப்படாமலேயே உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட அந்தஸ்தைப் பெற்றும் கிளை நுாலகமாக உள்ள இந்நுாலகத்தை மாவட்ட மைய நுாலகமாக அறிவித்து, இன்னும் பல ஆயிரம் புத்தகங்களுடன், சொந்த கட்டடத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X