பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் நவீன கழிப்பறை

Added : செப் 12, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்; கண்டமங்கலத்தில் உள்ள சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்தில் ரூ.7 லட்சம் செலவில் பயணிகளுக்கான நவீன கழிப்பறைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.புதுச்சேரி -விழுப்புரம் மின்சார அகல ரயில் பாதையில் வில்லியனுாருக்கும்-வளவனுாருக்கும் இடையே உள்ளது சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையம்.இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கழிப்பறைக் கட்டட வசதி நீண்டகாலமாக இல்லாமல் இருந்து வந்தது. தற்போது தென்னக ரயில்வே துறையின் மூலம் நவீன கழிப்பறைக்கட்டடம் கட்டும் பணி கடந்த 45 நாட்களுக்கு முன்பு துவங்கியது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிளுக்கான கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த நவீன கழிப்பறைக் கட்டடம் விரைவில் ரயில் பணிகள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும் என சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலைய அதிகாரி தமிழரசு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X