பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு வழிப்பாதையை மீறுபவர்கள் மீது திண்டிவனம் போலீசார் நடவடிக்கை

Added : செப் 12, 2020
Share
Advertisement

திண்டிவனம்; ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ள திண்டிவனம் நேரு வீதியில், போக்குவரத்து வீதிகளை மீறி வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

.திண்டிவனம் நேரு வீதியில், தாலுகா அலுவலகம், வங்கிகள், காய்கறி மார்க்கெட், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அமைந்துள்ளதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருக்கின்றது. குறுகிய பாதையான நேரு வீதி வழியாக செஞ்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நேரு வீதி வழியாக வந்து செஞ்சி ரோடு வழியாக செல்கின்றது.நேரு வீதியில், எதிர்புறம் வாகனம் வருதால், அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் தினந்தோறும் அவதியடைகின்றனர். இதனால் நேரு வீதி ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதே போல் மேம்பாலம் அருகே உள்ள மசூதி வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதியும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.இதை கடைபிடிக்காமல் நேரு வீதி உள்ளிட்ட வீதிகளில், வாகன ஓட்டிகள் தினந்தோறும் அத்துமீறி எதிரும், புதிருமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதைக்கட்டுபடுத்த திண்டிவனம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சேதுராமன் தலைமையில், போக்குவரத்து வீதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காலி பணியிடம்நிரப்படுமா: திண்டிவனம் போக்குவரத்து காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 30 பேர் பணி செய்ய வேண்டிய இடத்தில் பாதிபேர் மட்டும் பணியில் உள்ளனர். மீதி இடம் காலியாக உள்ளது. திண்டிவனத்தில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விழுப்புரம் எஸ்.பி.,ராதாகிருஷ்ணன் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X