சாலை சீரமைப்பு பணி மந்தம்வாகன ஓட்டிகள் கடும் அவதி| Dinamalar

சாலை சீரமைப்பு பணி மந்தம்வாகன ஓட்டிகள் கடும் அவதி

Added : செப் 12, 2020
Share

விழுப்புரம்; விழுப்புரத்தில் சாலை சீரமைப்பு பணி மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.விழுப்புரம் சீனுவாசா நகரில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, இச்சாலை தற்போது சீரமைப்பு பணி சில தினங்களுக்கு முன் துவங்கியது. இதற்காக, சாலையில் சிமெண்ட் கலவைகள் கொட்டப்பட்டு, சில தினங்களாக பணிகள் கிடப்பில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, சாலை சீரமைப்பு பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X