சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வளவனுாரில் இரு கடைகளுக்கு 'சீல்' கலெக்டர் அண்ணாதுரை அதிரடி

Added : செப் 12, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த வளவனுாரில், கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

வளவனுார் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைவீதி மற்றும் பொதுஇடங்களை, கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு, கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.வளவனுார் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள ஒரு நகைக் கடை மற்றும் மளிகை கடை ஆகியவற்றில் இருந்த சிலர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பயன்படுத்தாதது கண்டறியப் பட்டது.இதயைடுத்து, கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்படி, பேரூராட்சி செயல்அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்ட அலுவலர்கள், அந்த இரு கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும், அப்பகுதியில் விதிமுறைகளை மீறி, அதிக பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோவினை பறிமுதல் செய்யவும், கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.அப்போது, விழுப்புரம் தாசில்தார் கணேசன், வளவனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X