தமிழ்நாடு

ரூ.7.60 கோடி! கிசான் திட்டத்தில் போலி நபர்களிடம் பறிமுதல்...மாவட்ட வேளாண் அதிகாரிகள் துரித நடவடிக்கை

Added : செப் 12, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் முறைகேடாக பெற்ற பணம் இதுவரை 19 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயிகளின் நலன் கருதி, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 பிப்ரவரி 24ம் தேதி இத்திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இதில், ஆண்டிற்கு, 6,000 ரூபாய், மூன்று தவணைகளாக, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகள், உரிய ஆவணங்கள் வாயிலாக விண்ணப்பித்து, வங்கி கணக்கில் நிதியுதவி பெற்று வந்தனர். இத்திட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி ஆவணங்கள் வாயிலாக, விவசாயிகள் அல்லாதவர்களுக்கு நிதியுதவி பெற்றதாக புகார் எழுந்தது.இதனால், கடந்த ஏப்., 1ம் தேதிக்கு பின், ஜூலை மாதம் வரை இத்திட்டத்தில் சேர்ந்த பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்து, உண்மையான பயனாளிகள் இல்லாதவர்களை கண்டறிந்தனர். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கி புதியதாக சேர்க்கப்பட்ட 70 ஆயிரம் பேரில், 50 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

இவர்கள் வங்கி கணக்கில் இரண்டு தவணைக்கான தொகை 2 ஆயிரம் வீதம் 4 ஆயிரம் ரூபாய் டிபாசிட் ஆகியது தெரியவந்துள்ளது. இதையடுத்து முறைகேடாக பெற்ற பணத்தை திரும்பப்பெறும் நடவடிக்கையில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 7 ம் தேதி வரை 15,250 பேர் வங்கி கணக்கில் இருந்து ரூ.6.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் மட்டும் 3,750 பேரின் வங்கி கணக்கில் இருந்து தலா 4 ஆயிரம் வீதம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை வேளாண் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை 19 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7.60 கோடி பறிமுதல் செய்து, அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X