சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனம் அருகே கீழே கிடந்த மின்கம்பியை மிதித்த பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.திண்டிவனம் அருகே மேல்அதனுார் கிராமத்திலுள்ள திடீர்புரம் பகுதியில் வசிக்கும் காளிதாஸ் மகன் ஹரிகரன், 11; இவர் தாதாபுரம் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.சிறுவன் நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில், நிலத்தில் வேலை செய்து வந்த பாட்டிக்கு உணவு எடுத்துச் சென்ற போது, நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் பாய்ந்த சிறுவன் ஹரிகரன் பரிதாபமாக இறந்தார்.விபத்து குறித்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
12-செப்-202006:45:43 IST Report Abuse
JAYARAMAN மின் கம்பி அறுந்து விழுந்தால், அடுத்த மின் கம்பங்களில் மின்சாரம் தடைபடும். 10 மின்கம்பங்களுக்கு ஒரு கம்பத்தில் , ஒரு special cell phone வடிவமைத்து , வைக்க வேண்டும். அந்த கைபேசிகள், மின்சாரம் தடைபட்டால் , தானாகவே மின் வாரியத்திற்கு எச்சரிக்கை message அனுப்ப வேண்டும். உடனே மின்வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஒரு முயற்சிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X