பொது செய்தி

தமிழ்நாடு

தனிப்பிரிவு போலீஸ் அலுவலகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

விழுப்புரம்; தனிப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலியாக, விழுப்புரம் தனிப்பிரிவு போலீஸ் அலுவலகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், தனிப்பிரிவு போலீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட ஏராளமான போலீசார் பணியில் உள்ளனர். இதில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில், தனிப்பிரிவு போலீஸ் அலுவலகத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். இங்கு வெளிநபர்கள் உள்ளே வர அனுமதி மறுத்து, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள எண் அச்சிட்டுள்ளனர். மேலும், தனிப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் அனைவருக்கும், நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர்.இது எஸ்.பி., அலுவலக போலீசார் மற்றும் பணியாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X