பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

Added : செப் 12, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை நடந்தது.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம், அறிவியல் ஆய்வகம், கழிவறை மற்றும் சுற்றுச் சுவர் கட்ட தமிழக அரசு 225 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.அதனைத் தொடர்ந்து, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் சதீஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.ஆசிரியர் சவுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X