பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தனூரில் திறக்கப்பட்ட தண்ணீர் வேகம் குறைந்தது; எல்லீஸ் அணைக்கட்டை சென்றடையுமா என சந்தேகம்

Added : செப் 12, 2020
Share
Advertisement
 சாத்தனூரில் திறக்கப்பட்ட தண்ணீர் வேகம் குறைந்தது; எல்லீஸ் அணைக்கட்டை சென்றடையுமா என சந்தேகம்

திருக்கோவிலுார்; சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வரத்தின் வேகம் குறைந்ததால் எல்லீஸ் அணைக்கட்டை சென்றடையுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்பெண்ணையாற்றில் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் நிலை உருவாகியது.இதனைக் கருத்தில் கொண்டு சாத்தனுார் அணையில் இருந்து கடந்த 9ம் தேதி முதல் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. 10ம் தேதி விழுப்புரம் மாவட்ட எல்லையை வந்து சேர்ந்த தண்ணீர், மாலை 6:00 மணி அளவில் திருவரங்கம் வந்தது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி மணலுார்பேட்டை வந்து சேர்ந்தது. இன்று மாலை திருக்கோவிலுார் வந்தடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.குடிநீர் தேவை என்பதால் தண்ணீர் சேதாரமின்றி வரும் வகையில், ஏரிகளுக்குச் செல்லும் வாய்க்கால்களை பொதுப்பணித் துறையினர் மூடியுள்ளனர். அதேபோன்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், எல்லீஸ் அணைக்கட்டை வேகமாக சென்றடையும் வகையில் துரிஞ்சல் ஆற்றுக்கு செல்லும் பாதையை அடைத்து, அகலமான ஆற்றுப்பகுதியில் குறுகலாக பாதை அமைத்து தண்ணீர் வேகமாக கொண்டு செல்ல தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.அணையிலிருந்து இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் நிலையில், வறட்சி காரணமாக நீரின் வேகம் குறைந்துள்ளதால், எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் செல்லுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X