சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் பிரச்னை

Added : செப் 12, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில் இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு, உறவினர்கள் மருத்துவமனையில் பிரச்னை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், ஜே.பி.நகரை சேர்ந்த 50 வயது பிரமுகர், கடந்த 10 நாட்களுக்கு மேலாக இரும்பல், சளிக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று காலை வீட்டிலிருந்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். காலை 10.30 மணியளவில் அவர் இறந்தார். உறவினர்கள் சிலர், சளி, இரும்பல் தொடர்ந்து இருந்தவருக்கு கொரோனா சோதனை செய்யாமல் எப்படி நீங்கள் வைத்தியம் பார்த்து வந்தீர்கள் என கூறி ,மருத்துவமனையை முற்றுகையிட்டு பிரச்னை செய்தனர்.தகவலறிந்த திண்டிவனம் போலீசார் பிரச்னை செய்தவர்களிடம் புகார் கொடுத்தால், உடலை பிரேதச பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்கலாம் என கூறினர். உடன் உறவினர்கள் புகார் வேண்டாம் என்று கூறி, ஆம்புலசில் இறந்தவரின் உடலை ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர்.இதற்கிடையில் தனியார் மருத்துவமனையில் சளி, இரும்மலுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர், கொரோனா தொற்றால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று தெரியவில்லை. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X