தமிழ்நாடு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,819 பேருக்கு தொற்று

Added : செப் 12, 2020
Share
Advertisement
 விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,819 பேருக்கு தொற்று

விழுப்புரம்; விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இதுவரை தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 819ஆக உயர்ந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் 8,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில், 83 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 832 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று 161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 9,151 ஆக உயர்ந்தது. கொரோனா முன்னெச்சரிக்கையாக 1,069 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நோயில் இருந்து குணமடைந்த 8,234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேற்று இருவர் இறந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 147 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.சுகாதாரத் துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7,521 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 147 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7,668 ஆக உயர்ந்தது. இதில் 6,657 பேர் குணமடைந்தனர். 87 பேர் இறந்தனர். 924 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்த்து, நேற்றை நிலவரப்படி 16 ஆயிரத்து 819 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X