பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 12 வது முறையாக யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement

மதுரை:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக துாத்துக்குடி யாசகர் பூல்பாண்டியன் 65, மதுரை கலெக்டர் வினய்யிடம் நேற்று 12வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார். இதுவரை ரூ.1.20 லட்சம் வழங்கியுள்ளார்.



latest tamil news




துாத்துக்குடி ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டியன் திருமணமான சில ஆண்டுகளில் மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால் யாசகம் எடுக்க துவங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய அவரை குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். இதனால் யாசகத்தை தொடர்ந்தார்.
கொரோனா ஊரடங்கால் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தங்கி யாசகம் எடுத்து வந்தார். இதில் உணவு செலவு போக மீதமாகும் தொகை யை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கி வந்தார். ஏப்., முதல் ஜூலை வரை ரூ.10 ஆயிரம் வீதம் 11 முறை வழங்கினார். நேற்று 12வது முறையாக ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் வினய்யிடம் வழங்கினார்.


latest tamil news



அவர் கூறுகையில், ''கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக யாசகத்தில் கிடைத்த தொகையை வழங்கினேன். தற்போது பஸ் போக்குவரத்து துவங்கியதால் வெளியூர் செல்கிறேன். என் சமூக சேவை தொடரும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
12-செப்-202019:45:36 IST Report Abuse
RaajaRaja Cholan இவர் மூலம் தான் அளிக்கும் பணம் நன்கொடைக்கு கொரோனா நிதிக்கு செல்லும் என்று உணர்த்த பலர் பணம் இவரிடம் கொடுப்பார்கள் , இவரிடம் உள்ள பணத்தை கணக்கு கேட்கும் கள்ள உள்ளங்கள் , அவரிடம் எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று கேள்வி , நீங்களும் இரன்டு நாள் யாசகம் பெற்று விட்டு பாருங்கள் பிறகு பிறரை கிண்டல் செய்யலாம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-செப்-202017:16:42 IST Report Abuse
Endrum Indian ஐயோ ஐயோ இதை கேட்டவுடன் ஜோசப் விஜய் முதல் ரஜினி வரை எல்லோருக்கும் அவமானமாகிப்போய் அவர்கள் பற்றிய செய்தி கொஞ்சநாள் பேப்பரில் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள் இல்லையென்றால் அவமானத்தை யாராவது கிளப்பி விட்டால் என்ற பயத்தில்
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
12-செப்-202017:16:28 IST Report Abuse
Madhusoodhana Ramachandran இவரை பார்த்து ஸ்டாலின் வெட்கப்படவேண்டும். தன சொந்த காசை தர்மத்திற்கு செலவு செய்ய மாட்டார். கட்சிக்காரர்களிடம் செலவு செய்ய சொல்வார்.இவர்களுக்குள்ள கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு நல்லது செய்ய மனம் வராது.. மேலும் பதவி ஆசை பிடித்து அலைகிறார். சொந்த கட்சி எம்பி அமலாக்கத்துறையிடம் மாட்டிருக்கிறர் என் இந்த அரசியல் வாதிகளுக்கு பேராசையோ.நல்வாக்கு அதிகமாக சம்பாதிருந்தும் என்னும் பணத்தாசை விடவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X