சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் அலட்சியம் அதிகாரிகள் அலட்சியம்மூதாட்டி அலைக்கழிப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்; முதியோர் உதவித்தொகை தர மறுத்த அதிகாரிகளை கண்டித்து திருவெண்ணெய்நல்லுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

.திருவெண்ணெய்நல்லுார்அடுத்த ஆனத்துார்கிராமத்தை சேர்ந்தவர் ரத்தனவள்ளி, 69; இவரது கணவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதற்கு பின் ரத்தனவள்ளி கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டி திருவெண்ணெய்நல்லுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை மனு அளித்துள்ளார்.அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்ததால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார்.ஆனால் எங்கு சென்றும் முதியோர் உதவித்தொகை கிடைக்காததால், ஆத்திரமடைந்த அவர் அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து, திருவெண்ணெய்நல்லுார் வட்டாட்சியர்அலுவலகம் முன்பு மனுவை கையில் வைத்தபடி நீண்ட நேரம் நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பரபரப்பு நிலவியது.அதிகாரிகள் மூதாட்டியிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.திருவெண்ணெய்நல்லுார், செப். 12-

முதியோர் உதவித்தொகை தர மறுத்த அதிகாரிகளை கண்டித்து திருவெண்ணெய்நல்லுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்..திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தனவள்ளி, 69; இவரது கனவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதற்கு பின் ரத்தனவள்ளி கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டி திருவெண்ணெய்நல்லுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை மனு அளித்துள்ளார். அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்ததால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார். ஆனால் எங்கு சென்றும் முதியோர் உதவித்தொகை கிடைக்காததால், ஆத்திரமடைந்த அவர் அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து, திருவெண்ணெய்நல்லுார் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனுவை கையில் வைத்தபடி நீண்ட நேரம் நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டதால், வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் மூதாட்டியிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X