இந்தியா

காய்கறி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

வில்லியனுார்; ஆத்மா திட்ட பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய முன்னோடி தொழில்நுட்ப செயல்விளக்க கூட்டம் நடந்தது.

வில்லியனுார் உழவர் உதவியகம் சார்பில் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் காய்கறி தோட்டப்பயிர் செய்யும் ஆத்மா திட்ட பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய முன்னோடி தொழில்நுட்ப செயல்விளக்க கூட்டத்திற்கு வேளாண் இயக்குனர் பாலகாந்தி தலைமை தாங்கினார் காய்கறி பயிர் செய்யும் ஆத்மா திட்ட பண்ணை விவசாயிகளுக்கு நுண்ணுட்டசத்து உரங்களை வழங்கி பேசினார்.விழாவில் வில்லியனுார் கோட்ட வேளாண் இணை இயக்குனர் சிவராமன், துணை இயக்குனர் கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக வில்லியனுார் உழவர் உதவியக வேளாண் அலுவலர் ஜோதிகணேசன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் சங்கரதாஸ், ஆதிமூலம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X