இந்தியா

கொரோனா பரிசோதனை முகாம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பாகூர்; டி.என்.பாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மணவெளி தொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையத்தில், கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.முகாமை, வட்டார வளர்ச்சி அதிகாரி மலர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டாக்டர் சதிஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், பொது மக்களுக்கு இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை பரிசோதித்து, கொரோனா பரிசோதனைக்கு உமிழ்நீர் மாதிரியை சேகரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X